தந்தை சமைத்த உணவால் உயிரை விட்ட சிறுமி – காரணம் தெரியுமா?

பிரித்தானியாவில் 9 வயது சிறுமி தமது தந்தை கையால் சமைத்து சாப்பிட்ட, தமக்கு விருப்பமான உணவால் உயிரிழந்த சம்பவம் அந்த குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள ஹாரோ பகுதியில் குடியிருந்து வரும் 9 வயதான நைனிகா என்பவர்தான் தந்தை சமையலால் நோய்வாய்ப்பட்டு கடந்த மே மாதம் 22 ஆம் திகதி உயிரிழந்தவர்.

பெற்றோருடன் குடியிருந்து வரும் இவர், தமது தந்தை வினோதிடம் தமக்கு விருப்பமான ப்ளாக்பெர்ரிகள் கலந்த pancake சமைத்துத் தர கேட்டுள்ளார்.

முதன் முறையாக மகள் விரும்பி கேட்டதால் தந்தை வினோத் மிகவும் பாசத்துடன் மகளுக்கு பரிமாறியுள்ளார்.

Capturejugyk,

இதனிடையே அந்த உணவு ஒத்துக் கொள்ளாமல் போகவே உடனடியாக நைனிகாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் வினோத்(41) மற்றும் லட்சுமி(37) தம்பதியினர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பித்து ஒரு வாரம் கடந்த நிலையில், நைனிகாவின் மூளை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இனி சிகிச்சையினால் பலன் ஏதும் இல்லை எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் கைவிரித்துள்ளது.

நைனிகா உயிரிழக்கும் முன்னர் மருத்துவர்கள் மேற்கொண்ட ஒரு சோதனையில், குறித்த சிறுமி நோய்வாய்ப்பட காரணமாக அமைந்தது pancake ல் கலந்திருந்த ப்ளாக்பெர்ரிகள் என தெரிய வந்தது.

ப்ளாக்பெர்ரிகள் மட்டுமல்ல pancake ல் பால் பொருட்கள் கலந்ததாலும் ஒவ்வாமை ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு என தெரிவித்துள்ளனர்.

ஆனால் தங்கள் வீட்டில் பால் பொருட்களை அதிகமாக எவரும் விரும்பி உண்பதில்லை எனவும், pancake தயாரிக்க பயன்படுத்திய எஞ்சிய பொருட்களில் நச்சுத்தன்மை இருந்திருக்க வாய்ப்பு உண்டா என்பது தங்களுக்கு தெரியவில்லை எனவும் நைனிகாவின் தாயார் லட்சுமி தெரிவித்துள்ளார்.

தற்போது ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் லட்சுமி ஈடுபட்டு வருகிறார்.