பொலிஸாருக்கு காதைப் பொத்தி அறைந்த பெண்; கணவருக்கும் கடும் தாக்குதல்!

நீதிமன்றத்தில் பொலிஸார் ஒருவரைத் தாக்கிவிட்டுச் சென்ற பெண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

image_440f21142a

இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

பாணந்துறை மேலதிக நீதவான் நீதிமன்ற சாட்சி கூண்டுக்கு அருகில் வைத்து பண்டாரகம பொலிஸ் அதிகாரி சுனில் என்பவர் மீது, பெண் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

குறித்த நீதிமன்றத்தில் தனது கணவர் சம்மந்தப்பட்ட வழக்கு ஒன்றுக்கு வந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது தனது கணவரையும் தாக்கியுள்ளார்.

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த நிகழ்வினால் நீதிமன்ற நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், குறித்த பெண் நேற்றைய தினம் காலை 8.30 மணியளவில் நீதிமன்ற வளாக வாசலில்  பெண் பொலிஸாரையும் கடுமையாக திட்டியதோடு குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியை தாக்கிவிட்டு வெளியே வந்தபோது குறித்த பெண் நீதிமன்றப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை விளக்கமறியலில் வைத்திருக்கும் அதே நேரம் மனநல மருத்துவமனைக்கும் அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.