திட்டமிட்டப்படி வடக்கில் முழு கதவடைப்பு போராட்டம் இன்று நடைபெறும்

அனுரதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை வடக்கில் முன்னெடுக்கப்படும் முழு கதவடைப்பு போராட்டம் திட்டமிட்டப்படி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DSC091221-300x225

அத்துடன், வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டமும் ஒழுங்கு செய்தபடி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆளுனர் அலுவலகம் முன்பாக பொது மக்களை நாளை காலை 9.00 மணியளவில் ஒன்றுகூடுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “முழு கதவடைப்பு போராட்டம் நடைபெறும்போது அவசர தேவைகளுக்காக வைத்தியசாலை செல்லும் பொது மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த வேண்டாம்.

வீதிகளில் தடைகளை ஏற்படுத்துதல் ரயர்களை எரித்தல் போன்ற செயற்பாடுகளில் எவரும் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை மறுதினம் யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராகவும் போராட்டம் இடம்பெறும்” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.