தோனியின் செயல்! கண்ணீர் விட்டு நெகிழ்ந்த பாகிஸ்தான் ரசிகர்!

இந்திய அணியின் நட்சத்திர நாயகன் தோனி தன்னைக் கண்டு உணர்ச்சி வசப்பட்ட ரசிகன் ஒருவனை கட்டித்தழுவிக்கொண்ட சம்பம் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

dhoni_21432

தோனியைச் சந்திப்பதற்காக அவருடைய தீவிர ரசிகனான பாகிஸ்தானைச் சேர்ந்த காசிம் அடில் (வயது 16) என்ற இளைஞன் இந்தியா எதிர் அவுஸ்ரேலிய அணிகள் மோதிக்கொண்ட ஒருநாள் போட்டி ஒன்றினைக் காண இந்தியா வருகைத்தந்துள்ளார்.

தொடர்ந்து மூன்று தினங்கள் தோனியைக்கான அவர் தங்கியிருந்த ஹோட்டலில், காசிம் அடிலலும் தங்கி தோனியைப் பார்த்துவிட முயற்சி செய்தும் அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

தினமும் பலமணிநேரம் தோனியைச் சந்திக்க அவர் முயற்சி செய்தபோதும் அதற்கான வாய்ப்பினை தோனியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்தவர்கள் வழங்க மறுத்துள்ளனர்.

அதன் பின்னர் தோனி தான் தங்கியிருந்த உணவகத்தில் காலை உணவருந்தியதன் பின்னர் ரசிகர்கள் தோனியுடன் ஒளிப்படம் எடுத்துக்கொள்வதற்காக திரண்ட சமயம் காசிம் அடிலும் அவர்களோடு இணைந்துள்ளார்.

தோனிக்கு அருகில் சென்றதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் காசிம் அடில் அழுதவாறு நின்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் காசிம் அடிலை அருகில் அழைத்த தோனி “ஏன் அழுகின்றாய், பாகிஸ்தானில் இருந்து வந்த நீ என் தீவிர ரசிகனாக இருக்கின்றாயே” எனக் கூறி கட்டித்தழுவி தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தோனியின் இந்தச் செயலை அருகில் இருந்தவர்களை வியப்புடன் நோக்கியதாக குறிப்பிடப்படுவதோடு, தோனிக்கு இந்தியாவைத் தாண்டி குறிப்பாக இந்திய அணியின் எதிரி நாடான பாகிஸ்தானிலும் தீவிர ரசிகர்கள் உள்ளது அவரது தனிச்சிறப்பு என சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.