திருப்பூர் பல்லடம் ரோடு டி.எம்.சி. காலனியில் கணவனும் மனைவியும் தூக்கிட்டு தறகொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் திருப்பூர் மாநகராட்சியில் சாரதியாக வேலைசெய்யும் 35 வயதுடைய பாலமுருகனும் அவரது மனைவியான 30 வயதுடைய கலைவாணி என்பவரும் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
குறித்த தம்பதிகளுக்கு ஒரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
குழந்தைகள் 3 பேரும் திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்ற நிலையில் பள்ளி முடிந்து குழந்தைகள் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்டநேரம் ஆகியும் வீட்டின் கதவு தட்டப்பட்டும் திறக்கப்படாத நிலையில் சந்தேகம் அடைந்த உறவினர் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்துள்ளார்.
அப்போது வீட்டு உத்திரத்தில் பாலமுருகனும், கலைவாணியும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர்.
இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு பொலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீஸார் ர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
தொடர்ந்து தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
கடன் தொல்லை காரணமாக தம்பதி தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது குடும்ப பிரச்சினையா?, வேறு ஏதேனும் காரணமா என்பது உள்பட பல கோணங்களில் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.







