“யாழ்ப்பாண அடையாளம்” எனும் அமைப்பு சர்வதேசத்தை நோக்கி கோரிக்கை.

வடக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சகல புத்தர் சிலைகளும் அகற்றப்பட வேண்டுமென்று “யாழ்ப்பாண அடையாளம்” எனும் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

budha-kili-220517a

குறித்த சிவில் சமூக அமைப்பினால் சர்வதேசத்தை நோக்கி விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையிலேயே புத்தர் சிலைகளை அகற்றும் விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 பக்கங்கள் கொண்ட விரிவான விளக்கங்களுடன் தமது வேண்டுகோளை முன்வைத்துள்ள குறித்த “யாழ்ப்பாண அடையாளம்” எனும் சிவில் சமூக அமைப்பானது, வடக்கி்ல் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகள் உடனடியாக அகற்றிக் கொள்ளப்பட வேண்டும் என்று பிரதானமாக வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ள இராணுவ அதிகாரிகள் வடக்கில் சேவையில் ஈடுபடுவதை தடுக்க அழுத்தம் கொடுக்குமாறும் அமைப்பின் கோரிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளுக்கு அனுமதி பெற்றுக் கொடுத்தல், வடக்கு பொதுமக்களின் மீதான புலனாய்வுப் பிரிவினரின் கண்காணிப்பை ரத்துச் செய்தல் போன்ற கோரிக்கைகளும் “யாழ்ப்பாண அடையாளம்” அமைப்பினால் சர்வதேசத்தின் முன்வைக்கப்பட்டுள்ளது.