கிளிநொச்சி நகரில், அலுவலகத்திற்குச் சென்று ஊழியரை தாக்கிய பெண்!! நடந்தது என்ன??

கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி  அலுவலகம் ஒன்றில்  நேற்று(05) பிற்பகல்  இரண்டு மணியளவில்   அலுவலகத்திற்குச் சென்ற  பெண் ஒருவா் அங்கிருந்து உழியர் ஒருவரை தாக்கிய சம்வபம் இடம்பெற்றுள்ளது.
 iranuvamugamm-e1507324600726
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
போலி முகநூல் ஒன்றில் குறித்த பெண்  கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இராணுவத்திற்கும இடையில்  தகவல்களை பரிமாறுவதாக    பதவேற்றி   அதில் இந்த பெண்  இராணுவ முகாம் ஒன்றின் வாயிலில்  நிற்கும் படத்தினை பதிவேற்றியது தொடர்பில் ஆத்திரமடைந்த பெண்னே ஊழியரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது நான் இராணுவ முகாம் வாயிலில் நின்று காணி ஆவணத்தை வழங்கிய போது  அவா் பின் பக்கமாக நின்று  என்னை புகைப்படம் எடுத்துள்ளாா்.
இது நடந்து இரண்டு மாத்திற்கு முன்னார் ஆனால் நேற்று முன்தினம் தாயக செய்திகள்  எனும் முகநூலில் குறித்த படத்தை பதிவேற்றி என்னைப் பற்றி தவறான கருத்துக்களையும் பதிவேற்றியுள்ளாா்.
இது தொடர்பில்  குறித்த அலுவலக அதிகாரியிடம் முறையிட சென்ற போது அந்த ஊழியருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது நான் என்னை பாதுகாக்க தாக்கினேன். என்றாா்
இது தொடர்பில் குறித்த ஊழியர் கடமை நேரத்தில் தன்னை அலுவலனத்தில் நுழைந்து தாக்கியது தொடர்பில்  கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளாா்.