கனடாவில் குடியுரிமை பெற உள்ளீர்களா? – உங்களுக்கு மகிழ்ச்சியான ஓர் செய்தி

சீரமைக்கப்பட்ட கனடிய குடியுரிமை அமைப்பின் புதிய தேவைகள் அக்டோபர் 11லிருந்து வருகின்றது.

canada

குறுகிய கால வதிவிட தேவை மற்றும் மொழி மற்றும் அறிவு சோதனைக்கான புதிய தேவைகள் இவற்றில் அடங்குகின்றன.

நிரந்தர குடியிருப்பாளர்கள் கடந்த ஐந்து வருடங்களில் மூன்று வருடங்கள் கனடாவில் வசித்திருந்தால் இவர்கள் கனடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

குடிவரவு அமைச்சர் Ahmed Hussen- ஆல் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் பிரகாரம் 55 வயதிற்கு மேற்பட்ட விண்ணப்பதாரிகள் மொழி மற்றும் அறிவு பரீட்சைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவர்.

இந்த மாற்றங்கள் வருங்கால விண்ணப்பதாரர்களிற்கு ஒரு வரவேற்க கூடிய செய்தியாக அமையும்.

குடியுரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹாப்பர் அரசாங்கம் வதிவிட தகைமை கால எல்லையை அதிகரித்ததை தொடர்ந்து-குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பதாரி கனடாவில் ம்று வருடங்களில் நான்கு வருடங்கள் தொடர்ந்து வசித்திருக்க வேண்டும்- விண்ணப்பங்களின் எண்ணிக்கை சரிவடைய தொடங்கியது.

இது மட்டுமன்றி விண்ணப்பதாரிகள் 14-வயதிற்கும் 64-வயதிற்கும் இடையில் இருந்தால் கட்டாயமாக மொழி மற்றும் குடியுரிமை அறிவு பரீட்சைகளில் சித்தியடைய வேண்டும்.

கடுமையான விதி முறைகள் புது வரவாளர்கள் தேர்தல் செயல் முறைகளில் ஒருமைப்பாடு மற்றும் பங்களிப்புக்களில் முழு ஒருங்கிணைப்புடன் செயல் படுவதில் ஊக்கமிழக்க செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குடியேற்ற ஒருங்கிணைப்பின் ஒரு கடைசி படியாக குடியுரிமை அமைகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு லிபரல் சீர்திருத்தம் அடுத்த புதன்கிழமை நடை முறைக்கு வருகின்றது.

சர்வதேச மாணவர்கள் வெளிநாட்டு பணியாளர்கள் அகதிகள் நிரந்தர வதிவுடைமை பெறுவதற்கு முன்னர் கனடாவில் இருந்த காலம் ஆகியனவற்றிற்கு ஒரு வருடம் கிரடிட் வழங்கப்படும்.

குடியுரிமை கட்டணத்தொகையை குறைப்பது குறித்த திட்டம் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வயதானவர்களிற்கு டொலர்கள் 630 மற்றும் 18வயதிற்குட்பட்டவர்களிற்கு டொலர்கள் 100.

மார்ச் 31வரையிலான காலப்பகுதியில் கனடிய குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்க 108,635 என அரசாங்க தரவு தெரிவிக்கின்றதென கூறப்பட்டுள்ளது.வரலாற்று ரீதியாக வருடமொன்றிற்கு சராசரியாக கிடைக்கப்பெற்ற குடியுரிமை விண்ணப்பங்கள் 200,000எனவும் கூறப்பட்டுள்ளது.