வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் தலையில் ஆட்டு உரல் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த மனைவியை வெள்ளிக்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள குரண்டியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. 35 வயதான இவர் கூலி விவசாயி.
இவரது மனைவி செல்வி (30) மற்றும் குழந்தைகளுடன் ஊருக்கு வெளியே உள்ள தோட்ட வீட்டில் குடியிருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஊருக்குள் சென்ற செல்வி, எனது கணவரை யாரோ கொலை செய்து விட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆவியூர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செல்வி தோட்ட வீட்டுக்கு பொலிசார் வந்து பார்த்தபோது, செல்லப்பாண்டியின் சடலம் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்துள்ளது.
அதையடுத்து, சந்தேகமடைந்த பொலிசார் செல்வியை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது கணவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் ஆட்டுரல் கல்லை தலையில் போட்டு கொலை செய்ததாக செல்வி ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.







