மாபியா கும்பலுக்காக சிதைக்கப்பட்ட வித்தியா!

யாழ்ப்பாணத்தில் நாசகார வேலையை செய்யும் நோக்கிலேயே மகாலிங்கம் சசிக்குமார் (சுவிஸ் குமார்) இலங்கை வந்ததாக தீர்ப்பாயம் அறிவித்துள்ளதுஇளம் பிள்ளைகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதனை காணொளியாக வெளியிடும் மாபிபா கும்பலின் தேவைக்கமைய வித்தியா கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

swiss-kumar-300x157சுவிட்சர்லாந்திலுள்ள மாபியா குழு ஒன்றுக்கு வித்தியாவின் காணொளியை வழங்குவது சுவிஸ் குமாரின் நோக்கம் என நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்

வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்வதற்கு முன்னர் அவரின் நிழற்படம், சுவிஸ் மாபியா குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

வித்தியாவின் நிழற்படம் ஒன்றும் சுவிஸிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக மென்பொருள் பொறியியலாளர் சாட்சிங்களில் தெரிவித்துள்ளார்.
வித்தியா தொடர்பான காணொளியை சுவிஸ்குமார் வெளிநாடு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தாக சாட்சியகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்துள்ளார்.

வித்தியா இரு வேறு இடங்களில் வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஒரிடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதுடன், பிறிதொரு இடத்தில் கொடூரமான கொலை செய்யப்பட்டமை சாட்சிங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தீப்பாயத்தின் மூன்று நீதிபதிகளும் ஒருமித்து ஏற்றுக் கொண்டுள்ளனர்.

வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய ஏழு பேருக்கும் நேற்றையதினம் மரண தண்டணை விதித்து தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழு தீர்ப்பாயத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது