வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிலங்களையும் மூன்று மாதங்களில் விடுவிப்பதாக இராணுவத்தினர் இன்று உறுதியளித்ததாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிலங்களையும் மூன்று மாதங்களில் விடுவிப்பதாக இராணுவத்தினர் இன்று உறுதியளித்ததாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.வவுனியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்

Slide3

வன்னியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலைகள், ஆலயங்கள், அரச கட்டடங்கள் மற்றும் தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றதுஇதில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், இராணுவ, கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்