சீனாவின் Fuzhou பகுதிக்கு Zeng Meiqin என்ற கர்ப்பிணி கடைக்கு சென்றுள்ளார். நிறைமாத கர்ப்பிணி என்பதால், அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதைக் கண்ட அருகில் இருந்த பெண் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்போது அருகில் இருந்த மக்கள் இது தொடர்பான வீடியோவை எடுத்துள்ளனர்
குழந்தை பிறந்த பின்னர் குழந்தையின் உடலில் இருந்த இரத்ததை துடைத்துவிட்டு, அப்பெண்ணே தொப்புள் கொடியை வெட்டியதாகவும், அதன் பின் உடனடியாக மருத்துவனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவர்மருத்துவனையில் பத்திரமாக அனுமதிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிறந்த குழந்தை 3.8 கிலோ இருந்ததாகவும், குழந்தையும், தாயும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் விரைவில் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது







