கிளிநொச்சியில் அரச அதிகாரியை தாக்கிய பிஜோண்!

“இவன் ஆற்றை ஆள்” என்று புதிதாக வரும் ஒருவரைப் பார்த்து கேட்கும் பழக்கம் வந்துவிட்டது. அவன் ஆற்றை ஆளாக இருந்தாலும் அவன் எப்படிப்பட்டவன் என்று அறிவதற்கு ஒருவருக்கும் நேரமில்லாமல் போய்விட்டது.

fii

பாடசாலை மாணவர்கள் தொடக்கம் அரச பணியாளர்கள் வரை இவன் எவற்ற ஆளாய் இருக்குமோ என்ற பயத்தில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பின்நிற்கிறார்கள். இதனால் தான் வடக்கில் இன்று குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

அரச அலுவலகங்களுக்கு பொறுப்பாகவுள்ள அதிகாரிகள் செய்யும் தவறுகள் தான் அவர்களை கீழ் பணியாற்றுபவர்களிடம் தலைகுனிய வைக்கிறது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதி திரும்பிச் செல்கிறது என்று சொல்லப்படுகிறது.

அப்படி என்றால் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள். மக்கள் தமது தேவை கருதி அரச அலுவலகம் சென்றால் அதிகாரி மீற்றிங்கில் இருக்கிறார். அவரை இப்பொழுது சந்திக்க முடியாது என்று சொல்வதோடு அவரை எப்ப சந்திக்க முடியும் என்று கூட மக்களுக்கு சொல்லத் தெரியாமல் பணியாளர்கள் இருக்கும் போது வடக்கு எப்படி முன்னேறும். அதிகாரிகள் தமது வேலைகளை ஒழுங்காக செய்யாத படியால் தான் அதிகாரியின் கீழ்பணியாற்றுபவர்கள் அதிகாரிகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை இதனால் சண்டை போடும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.

அதிகாரி என்று கூட பார்க்காமல் சண்டை பிடித்த சம்பவம் கிளிநொச்சியில் உள்ள ஒரு அரச அலுவலகம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. அதிகாரி ஒருவருக்கு பீயோன் அடித்த சம்பவம் கிளிநொச்சியில் உள்ள போக்குவரத்து சம்பந்தமான அரச அலுவலகம் ஒன்றில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. அடிவாங்கிய அதிகாரி பீயோனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் அந்த சம்பவத்தை தனக்குள் மறைத்துவிட்டார்.

பீயோனிற்கு தெரிந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள அதே பிரிவைச் சேர்ந்த அரச அலுவலகம் ஒன்றில் அதிகாரியாக இருக்கின்றாராம். அதனால் பீயோனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் பயத்தில் அதிகாரி தவிர்த்துவிட்டாராம் என்று அந்த அலுவலக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்தன.

பீயோனுக்கு தெரிந்தவர் என்றால் பீயோன் தப்பு செய்ய இந்த அதிகாரி இடம் கொடுக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. அந்த அலுவலகத்தில் இருப்பவர்கள் பீயோனை அவருக்கு வேண்டப்பட்டவர் என்று பீயோன் செய்த தப்பை பெரிதாக பார்க்கிறார்கள் இல்லை.அலுவலக நடைமுறையில் வளர்ந்த வளர்ப்பு இப்படியாகப் போய்விட்டது.

அதிகாரியின் கீழ் பணியாற்றும் ஒருவர் பணிந்து நடக்காமல் மிதித்துப் போகிறார் என்றால் இந்த அலுவலகத்தில் பீயோனா அதிகாரி. அதிகாரி பீயோன் வேலையைப் பார்க்கிறாரா? பீயோனுக்கு அதிகாரி இடம் கொடுத்த படியால் தான் இந்த சம்பவம்
நடக்க காரணமாகப் போய்விட்டது.

அதிகாரி இடம் கொடுப்பதற்கு பீயோனுக்கும் அதிகாரிக்கும் என்ன தொடர்பாக இருக்கும்? என்று கேள்வி எழுகிறது. இந்த அதிகாரி தவறு செய்யாவிட்டிருந்தால் பீயோன் மீது நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.

தவறு யார் பக்கம் என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமாக இருந்தால் தவறுகளை இல்லாமல் செய்ய முடியும்.