வேலை பிடிக்காததினால் 23வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட – 26 வயது பட்டதாரி..

பணியாற்றி வந்த வேலையில் திருப்தி இல்லாததால் ஐ.ஐ.டியில் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர் 26வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

bf

ராஜஸ்தானைச் சேர்ந்த அன்கித் வாத்வா (வயது 26), கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விநிலையத்தில் (IIT) பயின்று பட்டம் பெற்ற இவர், தகுதித் தேர்வு ஒன்று எழுதுவதற்காக பஞ்சாப் பாநிலம் குர்கான் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று (25-9-17) அதிகாலை 2.30 மணியளவில் தான் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 23வது தளத்தில் இருந்து திடீரென குதித்து அன்கித் தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக விசாரித்து வரும் காவல்துறையினர், இறந்து போன அன்கித், தான் செய்துகொண்டிருக்கும் வேலை மீது விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார், இதனால் கடந்த 16 மாதங்களாகவே அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார், இதற்காக அவர் சிகிச்சை  எடுத்தும் வந்தார். இதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதும் காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்துகொண்ட அன்கித் மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.