-
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சின்ன சின்ன அவமானங்கள் வரக்கூடும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: உற்சாகமாக எதையும் செய்ய தொடங்கு வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ் வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சில தந்திரங் களை கற்றுக் கொள்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக் கில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
-
கடகம்
கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அநாவசிய செலவுகளைக் கட்டுப் படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள் வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் வந்து நீங்கும். வெளி யூரிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சிக்கல்கள் ஒன்று தீரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி கரமான சூழ்நிலை உருவாகும். எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
-
கன்னி
கன்னி: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். அரசாங்க விஷயம் விரைந்து முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள்.
-
துலாம்
துலாம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர் கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். அழகு, இளமைக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலித மாகும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் சலசலப் புகள் வரும். அடுத்தவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அலைகழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
-
தனுசு
தனுசு:
குடும்பத்தினருடன் சின்ன சின்ன விவாதங்கள் வந்து போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் போட்டி களை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். போராடி வெல்லும் நாள்.
-
மகரம்
மகரம்: திட்டமிட்ட காரியங் கள் வெற்றியடையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர் கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.
-
கும்பம்
கும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோ கத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
மீனம்
மீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களா வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.