பதினெட்டு வயதுக்கும் குறைவானோர் வாகனம் ஓட்டினால் சட்ட நடவடிக்கை

பதினெட்டு வயதுக்கும் குறைவானோர் வாகனம் ஓட்டும் பட்சத்தில் அவர்களின் பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

d2

பாதுகாப்புக்கான தேசிய கவுன்சிலால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

18 வயதுக்குக் குறைந்தவர்களின் அலட்சியமாக வாகனம் ஓட்டும் செயற்பாடுகளே அண்மைக்காலத்தில் இலங்கையில் நடைபெற்ற பெரும்பாலான விபத்துக்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதிவேகமாக வாகனங்களைச் செலுத்தும் இளைய வயதினர் அவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது விபத்துக்களில் சிக்கி தங்கள் உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர்.

இதனைக் கருத்திற் கொண்டே அவ்வாறு வாகனம் செலுத்த அனுமதிக்கும் பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.