இன்று முதல் அவதானமாக வாகனங்களை செலுத்துங்கள் சாரதிகளே! – இல்லாவிடில் ஆபத்து

போக்குவரத்து சட்டங்களை மீறும் சாரதிகளை அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

d1

அவ்வாறு இனம் காணப்பட்டவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் வாரங்கள் முழுவதும் இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன் கீழ் சிவில் ஆடையில் பொலிஸ் அதிகாரிகள் சாதாரண வாகனங்களில் கொழும்பு நகரம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.இதன்போது, போக்குவரத்து சட்டத்தை மீறும் சாரதிகள் அடையாளம் காணப்படுவார்கள்.

அவர்களால் சீருடையில் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் இது தொடர்பில் அறிவிக்கப்படும். அதற்கமைய குறித்த சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.