பிறந்து ஏழு நாட்கள் கொண்ட சிசு அயல் வீட்டின் நாய் கடித்ததில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹபரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாமல்புர ஆசிரிகம எனும் இடத்தில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. நாயின் கடியால் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான சிசு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நாமல்புர – ஆசிரிகமவைச் சேர்ந்த 24 வயதான தாய் ஒருவர் தனது மூன்றாவது சிசுவை நேற்று முன்தினமிரவு உறங்க வைத்துள்ளார். ஏற்கனவே அந்த தாய்க்கு 6, 2 வயது நிரம்பிய இரு மகள்மார் உள்ள நிலையில் மூன்றாவது பிள்ளையான குறித்த சிசிவை வீட்டின் நிலத்தில் விரிப்பொன்றில் உறங்கச் செய்துள்ளார்.
பின்னர் சிசுவை நுளம்பிடமிருந்து பாதுகாக்க நுளம்பு வலையையும் விரித்துள்ள அந்த தாய் பின்னர் இரவு நேர உணவு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதன்போது வீட்டுக்குள் வந்துள்ள அயல் வீட்டில் உள்ள நாய் சிசுவை கடித்து குதறியுள்ளது.
உடனடியாக சிசுவின் அழு குரல் கேட்டு தாய் ஓடி வந்துள்ள போது நாய் சிசுவை கெளவுவதை கண்டு அதனிடமிருந்து சிசுவை மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
ஹபரணை வைத்தியசாலையில் சிசுவை பரிசோதித்த மருத்துவர்கள் தலையில் பலத்த காயம் காணப்பட்டதால் உடனடியாக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.
எனினும் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.தியசாலைக்கு மாற்றியுள்ளனர். எனினும் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.






