பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவிக்கு தனது தொலைபேசி இலக்கத்தை வழங்கிய ஆசிரியர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா இறம்பைக்குளத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில வாரங்களிற்கு முன்னர் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் போது வவுனியாவின் பிரபல பாடசாலை ஒன்றில் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவியிடம் தொலைபேசி இலக்கத்தினை கொடுத்த ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி பரீட்சை எழுதிக்கொண்டிருந்த வேளை பரீட்சை மண்டபத்தின் மேற்பார்வையாளர் ஒருவர் பிறிதொரு ஆசிரியரிடம் தனது தொலைபேசி இலக்கத்தை குறித்த மாணவியிடம் கொடுக்குமாறு பணித்துள்ளார்.
மேற்பார்வையாளரின் வேண்டுகோளிற்கிணங்க மற்றைய ஆசிரியர் தொலைபேசி இலக்கத்தை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பரீட்சை முடிவடைந்த பின்னர் குறித்த மாணவி இந்த விடயம் தொடர்பில் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் குறித்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை இவ்வாறான பல முறைப்பாடுகள் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் தொடர்பில் இருப்பாதாக தெரிவிக்கப்படுகின்றது.