திருப்பதி கோவிலில் உள்ள தங்க கிணறு.?? உண்மையா?? அதன் ரகசியம் தெரியுமா.!
ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் பாரம்பரிய கலை அம்சத்தை கொண்டு கட்டப்பட்ட திருப்பதி பாலாஜி கோயில் அமைந்துள்ளது. நம் அனைவருக்கும் தெரிந்ததே.
கடல் மட்டத்திலிருந்து 3200 உயரத்தில் அமைந்திருக்கும் இம்மலையில் ஆதிசேஷனின் அவதாரமாக கருதப்படும் ,
நாராயாணாத்ரி, லாத்ரி, சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி மற்றும் வெங்கடாத்ரி போன்ற ஏழு சிகரங்கள் அமைந்துள்ளது. அதன் பெயர் காரணமாகவே, ஏழுமலையான் என்கிறோம்
கடவுள் ஏழுமலையானே மனித உருவில் அவதரித்ததாகவும்,அவரே இந்த கோயிலை கட்டச் சொன்னதாகவும் முனிவர் ஒருவர் கூறியுள்ளார். புராணமும் அதையே கூறுகிறது..
தொண்டைமான் வம்சத்தினர் திருப்பதி கோயிலை தங்கத்தில் அலங்கரித்ததாகவும் அந்த வம்சத்திலே திருமலையான் மனிதராக அவதரித்ததாகவும் ஆந்திர மக்கள் கூறுகின்றனர். அதற்கும் ஆதாரம் உள்ளதாக கூறுகின்றனர்..
திருப்பதி கோவில் உள்ள திருமலையின் அருகே 2 தங்க கிணறு உள்ளது..அந்த கிணற்றில் உள்ள நீர் உபயோகபடுத்த உகந்தது அல்ல என்று கிட்டதட்ட 33 வருடங்களுக்கு முன் அரசால் மூடப்பட்டது.
பின்னர் 2007 ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் மகிமை காரணமாக அந்த கிணற்றில் நீர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாறியது என்கின்றனர் அப்பகுதி மக்கள்
உலகிலே தங்கத்தால் அலங்கரிக்கபட்ட கிணறு இது ஒன்றுதான். இந்த கிணறு தொண்டைமான் காலத்தில் தங்கத்தால் கட்டப்பட்டது என்று முனிவர்கள் பலர் கூறுகின்றனர்.







