பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச காட்சிகள் அடங்கிய இறுவெட்டுகள் விநியோகம் செய்த மூவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கு விற்பனை செய்துவந்த ஆபாச இறுவெட்டுகள் ஒருத்தொகையுடன் மூவரை கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேன நகரில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே 270 ஆபாச காட்சி இறுவெட்டுகள் கைப்பற்றப்பட்டது.

ஹட்டன் பொலிஸ் டிவிசனுக்குட்பட்ட ஹட்டன் இரகசிய பொலிஸாரினால் மேற்படி சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச காட்சி இறுவெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு வர்த்தக நிலையங்களிலிருந்து மேற்படி இறுவெட்டுகள் மீட்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.