பிரபாகரன், குட்டிமணி கைது செய்யப்பட்ட போது அவர்களை காப்பாற்றியது யார்?

20090522261002601சென்னையில் பாண்டி பஜாரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின் கைது செய்யப்பட்ட பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் மீட்பதற்கு எனது தந்தை முயற்சி செய்தார் என முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் இளைய புதல்வரான பகீரதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பல தடவைகள் பிரபாகரனை சந்தித்துள்ளதாகவும், பாண்டிச்சேரியில் பிடிபட்ட குட்டிமணி தங்கதுரையையும் மீட்பதற்கு அவர் முயற்சி செய்தார் எனவும் குறிப்பிட்டார்.

தமிழர் விடுதலைக்கூட்டணி ஆயுத விடுதலை இயக்கங்களை தமக்கு சவால் மிக்கவையாக நினைக்கவிலலை. என்னுடைய தந்தை அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் புலிகளை பகிரங்கமாக விமர்சித்தது இல்லை. எமது இளைஞர்கள் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார் எனவும் குறிப்பிட்டார்.

ஆனால் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் புலிகள் இந்திய இராணுவத்துடன் யுத்தம் செய்தார்கள்.

இதன் காரணத்தினாலேயே கட்டுப்படுத்த முடியாத சக்தியை உருவாக்கினோம். இது எல்லோரையும் அழித்து விட்டு தன்னையும் அழித்து விடும் என எனது தந்தை அப்போதே குறிப்பிட்டார் எனவும் பகீரதன் தெரிவித்துள்ளார்.kuddymani