உறியடி என்ற முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் விஜயகுமார். இவர் எப்போதும் பல புரட்சிகரமான கருத்துக்களை பேசுபவர்.
தன் படங்களும் அப்படித்தான் இருக்கும் என்று கூறியவர், இந்நிலையில் விஜயகுமார் கூறுகையில் ’சமீப காலமாக நீட் தேர்வை எதிர்த்து பலரும் தமிழகத்தில் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் ஜிமிக்கி கம்மல் பாடலை ஒரு சிலர் ட்ரெண்ட் செய்கின்றார்கள், ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
மேலும், அந்த பாடலில் நடனமாடிய பெண்ணையே நீட் தேர்வை எதிர்த்து பேசி ஒரு வீடியோ வெளியிட சொல்ல வேண்டும் போல’ என்று வருத்தமாக சில கருத்துக்களை கூறியுள்ளார்.