இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற போர்க்குற்ற ஆதாரங்கள் பல வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இறுதிக்கட்ட போரில் சரணடைந்த போராளிகள் இலங்கை இராணுவத்தினால் கொலை செய்யப்படும் காணொளி தற்போது வெளி வந்துள்ளது.
இலங்கையில் போர் ஓய்ந்து 8 வருடங்களை தாண்டியுள்ள போதும், போர்க்குற்ற ஆதாரங்கள் இன்னும் வெளி வந்து கொண்டிருக்கின்றமை.
கடந்த மஹிந்த அரசாங்கத்தின் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுத்து வந்தன.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக பல பிரேரணைகள் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளினால் முன்வைக்கப்பட்டன.
போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட கடந்த ஆட்சியாளர்கள் தண்டிக்கப்படுவார்கள் என நிலையின் போது, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அதனை முற்றாக மாற்றியிருந்தது.
இலங்கையின் சமகால அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்பட்டதன் விளைவாக போர்க்குற்ற ஆபத்திலிருந்து கடந்த ஆட்சியாளர்கள் தப்பியிருந்தனர்.
இந்நிலையில் போர்க்குற்றம் தொடர்பான மற்றுமொரு ஆதாரம் வெளியாகி தமிழ் மக்களை மிகவும் வேதனை அடைய வைத்துள்ளது.






