கனடாவில் தமிழ் இளைஞர் குத்தி கொலை

கனடாவில் கடந்த ஞாயிறு அன்று கத்தியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை குடிமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

1462282793-4088

குறித்த சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் மீது ரொறன்ரோ பொலிசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர்.

கடந்த ஞாயிறு அன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் Eglinton அவென்யூ பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குற்றுயிராக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். குறித்த நபரை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கத்தியால் தாக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குகப்பிரியன் மகேந்திரராஜா(33) கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக வெள்ளியன்று பொலிசார் அறிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் Prosper Jean Laurent(18) என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ரொறன்ரோவில் மட்டும் இந்த ஆண்டில் இதுவரை 37 நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.