அடம்பிடிக்கும் ராம் ரஹீம்: மசாஜ் செய்ய ஹனி வேண்டுமாம்

பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர் ராம் ரஹீம் சிங். இதனால் அவரது வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் இன்சான் தலைமறைவாகிவிட்டார்.

jj

தற்போது சிறையில் இருக்கும் ராம் ரஹீம், ஹனிப்ரீத் இன்சானை தன்னுடன் சிறையில் இருக்க அனுமதிக்குமாறு சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு பிசியோதெரபி மற்றும் மசாஜ் செய்துவிட்ட ஹனி தன்னுடன் இருந்தால் வசதியாக இருக்கும் என்று அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.

சுனாரியா சிறையில் ராம் ரஹீம் சிங்கிற்கு எந்த சிறப்பு வசதியும் செய்து கொடுக்கக் கூடாது என்று சிபிஐ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் ரஹீம் சிங்கிற்கும், ஹனிப்ரீத் இன்சானுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக ஹனியின் முன்னாள் கணவர் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.