முழந்தாளிட்டு வாழ்வதனைவிட எழுந்து நின்று மரணிப்பது மேல்… தீ பரவுவது போல் தமிழகமெங்கும் மக்கள் போராட்டம்: வெடிகுண்டைவிட வலிமையானது மாணவர் சக்தி..!!

WS

மாணவி அனிதாவின் மரணம் தமிழக மக்களின் மனட்சாட்சியை உலுக்கியுள்ளது. ‘இது உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். தமிழ்நாடு முழுக்க நிச்சயம் போராட்டங்கள் நடக்கும்.

மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு தமிழகம் எங்கும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

என்ன சட்டம் கொண்டு வந்தாலும் தமிழக மக்கள் எதிர்க்க மாட்டார்கள். பேசாமல் அடங்கி கிடப்பார்கள் என்று மோடி அரசு நினைத்தது.

ஆனால் நீட் தேர்வு முறைக்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளார்கள். மதுரையில் பிரதமர் மோடியின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டுள்ளது

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் ரயில் மறிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் மாணவர் போராட்டம் வெடித்துள்ளது.

RUYE

பா.ஜ.க அமைச்சரின் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க அலுவலகங்கள் முற்றுகை செய்யப்படுகின்றன.

தீ பரவுவது போல் தமிழகமெங்கும் மக்கள் போராட்டம் பரவுகிறது. ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் தமது மருத்துவ கல்விக்காக போராட ஆரம்பித்துள்ளார்கள்.

EHDJH

மாணவர் சக்தி வெடிகுண்டைவிட வலிமையானது என்பதை மீண்டும் ஒருமுறை மோடி அரசு காணப் போகிறது.

தமிழக மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்களும் உலகெங்கும் போராட்டத்தில் குதிக்க தயாராகிறார்கள்.

அனிதா உடல் தகனம் செய்யப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் சமூக அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.