தற்போது நடக்கும் அரசியல் சூழல் பற்றி கமல் பல விதத்தில் விமர்சித்து வருகிறார். கோவையில் நேற்று நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு கமல் பேசுகையில், ‘அரசியல் சூழலை, இப்படியே விட்டு வைக்காமல், மாற்ற வேண்டியது, நம் கடமை. ‘கோட்டையை நோக்கிப் புறப்படுவோம். நான், நேரடி அரசியலுக்கு வந்துவிட்டேன்’ என்று கூறினார்.
இது குறித்து அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், ரசிகர் மன்றத்தை, நற்பணி இயக்கமாக மாற்றி, இதுவரை, 40 கோடி ரூபாய்க்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நவம்பர் 7-ல், கமல் பிறந்த நாள். அன்றைய தினம், வழக்கம் போல் நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், அரசியல் பிரவேசத்தையும், கமல் அறிவிக்க உள்ளார். அனேகமாக, அன்றே தன் புது கட்சி அறிவிப்பை யும் வெளியிடுவார் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில் அரசியல் கற்றுக்கொள்வதற்காக கேரளா வந்துள்ளதாக கமல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.