பாடசாலையில் மர்மக் கொலை: பொலிஸ் விசாரணை தீவிரம்!

கம்பளை பகுதியில் உள்ள பாடசாலையின் கட்டடம் ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மீட்கப்பட்டுள்ளது.

pp

கட்டடம் ஒன்றில் இவ்வாறு சடலம் ஒன்று இருப்பதாக பாடசாலை மாணவர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிக்கப்படுகின்றது.

கைவிடப்பட்ட நிலையில் இருந்த கட்டடத்திலேயே குறித்த சடலம் இருந்ததாகவும், சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதால் இனங்காண முடியாது நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலத்தின் கழுத்து பகுதியில் வயர் ஒன்று கட்டப்பட்டு கட்டடத்தின் கூரையில் தொங்கவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 64 வயதான நபரொருவர் கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.