திலீபனின் நினைவுத் தூபி நேற்று சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை சிரமதானம் செய்யும் பணிகள் இடம்பெற்றுள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (5)

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபி நேற்று சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான இராசையா பார்த்தீபன் எனும் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து ஈழப் போர்களில் பங்குபற்றியவர்.

 

அத்துடன், ஈழத்தில் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவத்தின் கொடுமைகளை எதிர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 1987ஆம் ஆண்டு சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதேவேளை, தனது உயிர் பிரியும் வரை கொள்கை தவறாது அந்த அகிம்சைப் போராட்டத்தைக் கையிலெடுத்த பார்த்தீபனுக்காக நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பின்வீதியில் நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.