பதுளை நகர போக்குவரத்துப் பொலிசாரின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள புதிய மோட்டார் பைக்குகளில் கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன ஓட்டிகளின் தவறுகளின் போது போக்குவரத்துப் பொலிசார் லஞ்சம் பெற்றுக் கொள்வது, பொதுமக்களுடன் அடாவடித்தனமாக நடந்து கொள்வது என்பன போன்ற சம்பவங்கள் அடிக்கடி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றது.
அவ்வாறான சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பதுளை போக்குவரத்துப் பொலிசாரின் பயன்பாட்டுக்காக தருவிக்கப்பட்டுள்ள புதிய மோட்டார் பைக்குகளில் கண்காணிப்புக் கமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தவறிழைக்கும் பொலிசாரை இலகுவில் கண்டுபிடிக்க முடியும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.