இலங்கையில் முதலாவது இருதய மாற்று சத்திர சிகிச்சை செய்து கொண்ட புஷ்பா குமாரிக்கு கொடுக்கப்படும் சலுகைகள்

இலங்கையில் முதன் முறையாக இருதய மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் வசிக்கு வீட்டை முழுமையாக குளிரூட்டல் வசதிகளுடன் மாற்றிக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

he

வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய நாச்சியாதீவு பிரதேச செயலகம் இந்த வீட்டை மாற்றியமைத்துக்கொடுக்க முன்வந்துள்ளது.

இதன்படி, இரண்டு அறைகளுடன் குடியிருக்கும் வீட்டை முழுமையாக சரிசெய்துகொடுக்கும் நடவடிக்கை நாச்சியாதீவு பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட குளிரூட்டல் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அவர்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் கணவர் கூலி வேலை செய்து வருபவர் எனவும், இவர்களுக்கு 8ஆம் தரத்தில் கல்வி பயிலும் மகள் ஒருவர் இருப்பதாகவுவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அண்மையில் புஷ்பா குமாரி என்ற 37 வயதான பெண்ணுக்கு இருதய மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் ஏழு மணி நேரமாக இந்த பெண்ணுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இருதய மாற்று சத்திர சிகிச்சை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, குறித்த பெண் தற்போது கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.