உடைந்த திரையை தானாகவே சரி செய்து கொள்ளும் ஸ்மார்ட் போன்!

ஸ்மார்ட் தொலைபேசி திரைகளில் விழும் விரிசல்களை, ஸ்மார்ட் தொலைபேசி தானாகவே சரிசெய்து செய்து கொள்ளும் வகையில் மோட்டரோலோ நிறுவனம் புதிய தொழில் நுட்ப புரட்சி ஒன்றினை படைக்கவுள்ளது.

mobile

ஷேப் மெமரி பாலிமர் என்ற திட்டத்தின் மூலம் இது சாத்தியம் எனத் தெரிவித்துள்ள மோட்டரோலோ தனது தொலைபேசிகளில் காலப்போக்கில் இந்த தொழில் நுட்பம் உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

தொலைபேசி டிஸ்பிளேயின் மேல் ஓர் மெல்லிய அடுக்கு (லேயர்) உருவாக்கப்படும். தொலைபேசி திரையில் விரிசல்கள் ஏற்படும் போது பாவனையாளரின் உடல் வெப்பநிலையில் அந்த லேயர் சூடாக்கப்பட்டு அதன் மூலம் விரிசல்கள் சரி செய்து கொள்ளப்படும் என மோட்டரோலோ நம்பிக்கை வெளியிட்டுள்ளது இந்த தொழில் நுட்பத்தின் ஊடாக விரிசல்கள் விழுந்த திரைகளை தொலைபேசி தானாகவே சரிசெய்து கொள்ளும். சாதனை படைக்கவுள்ள இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் மோட்டரோலோ நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.