இலங்கையில் ரசிகர்களுடன் கோஹ்லியும் அனுஷ்கா சர்மாவும்

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில், அவரது காதலி அனுஷ்கா சர்மாவும் இலங்கை வந்துள்ளார்.

k-a

அவர்கள் இருவரும், விராட் கோஹ்லியின் இலங்கையிலுள்ள சில ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படமொன்று viratkohli.club எனும் இன்ஸ்டகிராம் தளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தாம் பணியாற்றும் இடங்களில் இவ்வாறு சந்திப்பதாகவும், இறுதியாக அவர்களை நியூயோர்க்கில் இடம்பெற்ற IIFA விருது வழங்கும் நிகழ்வில் காணக்கிடைத்தாகவும் ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.