பூமிக்கு அடியில் சிவன் கோயில்!!

பூமிக்கு அடியில் இருந்த பழங்காலத்து கோயில் மதில் சுவரை கரூர் மாவட்ட மக்கள் கண்டுபிடித்துள்ளனர்.

sivan

முழுவதையும் தோண்டி பார்ப்பதற்குள்,பொதுப்பணித்துறை அதிகாரிகள் மக்கள் தோண்டிய குழியை மூடச் சொன்னதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கும் மேட்டுத்திருக்காம்புலியூர் கிராமத்தில்தான் குறித்த பழங்கால கோயில் பூமிக்கடியில் இருப்பது மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இது பற்றி குறித்த ஊர் மக்கள் தெரிவிக்கையில்

இரண்டு மாதத்திற்கு பின்னர் பெய்த மழை காரணமாக தரையில் ஒரு சிறிய லிங்கமும், மூன்றடி உயர நந்தியும் பூமிக்கு வெளியில் தெரிந்த நிலையில் அதனை குறித்த ஊர் மக்கள் எடுத்து ஒரு கொட்டகை போட்டு வழிபாடுகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில் குறித்த ஊரில் சில அசம்பவாவிதங்கள் நடந்ததாகவும் இதனால் அந்த சிவனையும், நந்தியையும் வைத்து கோயில் கட்ட குறித்த ஊர் மக்கள் முடிவெடுத்ததாகவும் தெரிவித்தனர்.

இதன்பின்னர் லிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து மேலும் குறித்த பகுதியை அகழந்த போது இருபது அடி ஆழத்தில் அம்மன் சிலை ஒன்றும் கூடவே, கோயில் இருப்பதற்கான அறிகுறியும், மதில்சுவரும் தென்பட்டுள்ளது.

மேற்கொண்டு தோண்டி பார்க்க முயன்ற வேளை ,பொதுப்பணித்துறை அதிகாரிகள் தோண்டி குழியை மூடுமாறு பணித்துள்ளனர்.

இதனால் மக்கள் கடும் விசனத்திற்கு உள்ளாகியுள்ளனர்.