
இதனை தொடர்ந்து வனப்பகுதியில் வசித்து வந்த 4 பேரை மிதித்து கொன்றுள்ளது. பின்னர், அருகில் உள்ள ஜாகர்கண்ட் மாநிலத்தில் புகுந்த அந்த யானை அங்கேயும் அட்டகாசம் செய்து வந்துள்ளது.
ஜாகர்கண்ட் வனத்தில் வசித்து வந்த 11 பேரை யானை தாக்கி கொன்றுள்ளது. இவர்களில் இருவர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தனர்.
15 பேரை கொன்றுவிட்டு வனத்தில் திரிந்து வரும் யானையை பிடிக்க வன உயர் அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
‘யானைக்கு மயக்க மருந்து செலுத்தி பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்து விட்டது.
இந்நிலை தொடர்ந்தால் பலரும் யானையால் தாக்கப்பட்டு கொல்லப்படும் அபாயம் உள்ளது.
எனவே, யானையை சுட்டு கொன்றுவிடுமாறு அரசு தங்களுக்கு உத்தரவு பிறபித்துள்ளது’ என வன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், யானையை சுட்டு கொல்வதற்காக திறமையான வேட்டைக்காரர் ஒருவரையும் நியமித்துள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் மதம் பிடித்த அந்த யானை சுட்டுக் கொல்லப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சனிக்கிழமையான இன்று சர்வதேச யானைகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் சர்ச்சைக்குள்ளான யானை ஒன்றை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






