2008-ல் நாட்டையே உலுக்கிய சம்பவம்..! 10 ஆண்டுகள் புதைந்து கிடந்தது, இன்று வெளிவர உள்ளது.!

நொய்டா இரட்டைக் கொலை வழக்கு அல்லது ஆருஷி கொலை வழக்கு மே 15-16, 2008 அன்று நடந்தது..

நொய்டாவில் மருத்துவர் ராஜேஷ் தல்வார் – நுபுர் தல்வார் ஆகியோரின் வீட்டில் நடந்த இரட்டைக் கொலைகள் குறித்த வழக்கு ஆகும்.

மருத்துவர் ராஜேஷ் தல்வார் – நுபுர் தல்வார் ஆகியோரின் 14 வயது மகள் ஆருஷி தல்வார் என்பவரும், அவர்கள் வீட்டு வேலையாளும் (45 வயதான ஹேமராஜ் பன்ஷாட்ம்) மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டு இறந்துகிடந்தனர்

அவர்களிடையே முறையற்ற உறவு இருப்பதாக சந்தேகித்து, ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வர், நுபுர் தல்வார் ஆகியோர் சேர்ந்து இருவரையும் கொலை செய்ததாக புகார் எழுந்தது..

ஆருஷி கொலை செய்யபட்டு இருந்த போது, அங்கு வந்த நொய்டா காவல்துறை, வீட்டு வேலையாளான ஹேமராஜ்  கொலையாளி எனக் கூறியது.

ஆனால் மறுநாள் ஹேமராஜ், தல்வார் வீட்டின் மேல்மாடியில் இறந்து கிடந்தது தெரிந்தது. மே 23, 2008-ல் ராஜேஷ் தல்வார் தான் அவரது மகள் ஆருஷியைக் கொன்றார் எனக் கைது செய்து செய்யப்பட்டார்.

நாட்டை உலுக்கிய இந்த இரட்டை கொலை வழக்கினை சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.2013 நவம்பரில், 5 ஆண்டுகள் கழித்து டாக்டர் ராஜேஷ் தல்வார் – நுபுர் தல்வார் குற்றவாளிகள் என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது

பிறகு, சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோருக்கு விதிக்கப்பட்ட தண்டணையை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் இறுதி தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது என்பது குறிபிடத்தக்கது..

இருவரும் காசியாபாத் நகரில் உள்ள தஸானா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தண்டனையை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்து வரும் அப்பீல் வழக்கின் விசாரணையில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது குறிபிடதக்கது

இதில் பெற்றோர் தான் உண்மையான குற்றவாளிகளா?? இல்லையா?? அல்லது வேறு யாராவது இதில் சமந்தப்பட்டுள்ளார்களா  என்பது தெரியவரும்.