வடக்கு, கிழக்கு மருத்துவர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வடக்கு, கிழக்கு மாகாண மருத்துவர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இது பற்றி அறிவித்துள்ளது.வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றி வரும் மருத்துவர்களுக்கான இடமாற்றங்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு இந்தப் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
மருத்துவர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் முறைப்பாடு செய்தும் உரிய தீர்வு வழங்கப்படவில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.







