கை-கால்களில் உள்ள தேவையற்ற ரோமத்தை அகற்றுவது எப்படி?..!!

சில பெண்களுக்கு கை, கால்களில் ஆண்களுக்கு உள்ளதை போன்று அதிகளவிலான ரோமங்கள் வளர்ந்திருக்கும். இதற்கு ஹோமோன் சுரப்பில் ஏற்படும் பிரச்சினைகள் தான் காரணம். எனினும் குறித்த ரோமத்தின் வளர்ச்சி பெண்களின் தைரியம், தன்னம்பின்கையை குன்றச் செய்கின்றது.

குறித்த ரோமவளர்ச்சி ஆண்களுக்கு தானே இருக்க வேண்டும். எதற்காக எமக்கு இவ்வாறு ரோமம் வளர்கின்றது? என்று பெண்கள் சிந்திக்க ஆரம்பிக்கும் பொழுது தம்மில் தாமே சந்தேகம் கொள்ள ஆரம்பிக்கின்றனர். இவ்வாறான சந்தேக சிந்தனைகள் அவர்களின் தன்னம்பிக்கையை குறைத்துவிடுகின்றது.
இந்த நிலையில் தேவையின்றி அதிகளவில் வளரும் முடிகளை எவ்வாறு அகற்றுவது என்று நோக்கலாம்.

1- இரண்டு கரண்டி சீனிக்கு, 1தே.க தேன், ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து, குறித்த கலவையை ரோமம் உள்ள இடங்களில் போட்டு தேய்த்தால் ரோமம் இல்லாமல் போய் விடும்.

2- பின்னர் மஞ்சளினை தயிரில் குழைத்து பூசி மசாஜ் கொடுக்க வேண்டும். இவ்வாறு மஞ்சல் மசாஜ் செய்வதனால் மீண்டும் மீண்டும் அதிகளவு முடி வளருதல் தடைப்படும்.

3- பின்னர் கடலைமா, பயிற்றம்மா, சிறிதளவு சந்தனம், சேர்த்து குழைத்து கொள்ள வேண்டும். குறித்த கலவையினை மாக்ஸ் போல் போட்டு 15 நிமிடத்தில் நன்றாக காய்ந்ததும் கழுவிவிட வேண்டும்.

4- அதனை தொடர்ந்து ரோஸ்வோட்டர் கொண்டு ஹொட்டன் பஞ்சினால் கைகளை ஒத்திக் கொள்ள வேண்டும்.

5- மேலும் இரவு வேளை எனின் ‘வஸ்லீன் கிறீமும்’, பகல் வேளை எனின் ‘ஷன் கிறீமும்’ போட்டு கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர தேவையற்ற ரோமங்கள் வளருவது தடைப்படுவதுடன். கை, கால் சுத்தமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் தென்படும். மற்றும் கை கால் வெடிப்புக்கள் எற்படுவது தடைப்படும்.