போதைப்பொருட்கள் மிக நுட்பமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறது

நாட்டிற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் கொக்கேய்ன், ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா போதைப்பொருள் போன்ற ஆபத்துக்கள் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

image001

பிரேசில், இலத்தீன் மற்றும் அமெரிக்காவிலிருந்து கொக்கேய்ன் போதைப்பொருளும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளினூடாக ஹெரோயின் போதைப்பொருளும் கொண்டு வரப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய ஔடதங்கள் அதிகார சபையின் பணிப்பாளர் பிரதீப் குமார கொஹெலென்கெதர இதை அறிவித்துள்ளார்.

இணையத்தள மருந்தகம் மற்றும் கொரியர் சேவை ஊடாக இந்த போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டு வரப்படுவதாக தேசிய ஔடதங்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவிலிருந்து படகில் இலங்கையின் கடற்பிராந்தியங்களூடாக கேரள கஞ்சாவும் நாட்டிற்குள் கொண்டு வரப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தை அண்மித்த பகுதிகளிலேயே இவ்வாறு போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய ஔடதங்கள் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.