2- வது டெஸ்ட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியது

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 53 ஓட்டங்களால் இன்னிங்ஸ் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

insl

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதோடு டெஸ்ட் தொடரின் வெற்றியையும் தனதாக்கியுள்ளது.

கடந்த 3ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக சிறப்பாக துடுப்பெடுத்தாடி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 622 ஓட்டங்களை குவித்தது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக புஜாரா 133 ஓட்டங்களையும், ரஹானே 132 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, வெறும் 183 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக டிக்வெல்ல 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதைதொடர்ந்து இலங்கை அணி 439 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த நிலையில், இலங்கை அணியை போலோ ஓன் முறையில் துடுப்பெடுத்தாட இந்திய அழைத்தது.

இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி, 386 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனடிப்படையில் இந்திய அணி ஓட்டங்களால் இன்னிங்ஸ் வெற்றியை பதிவுசெய்தது. இதில் இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 141 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 110 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ஜடோஜா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.