சிவபுரி மலையடிவாரத்தின் கீழ் உள்ள ஆச்சரியம் ! அறிவியலையும் குழப்பும் பெருமாள்!

பொதுவாக பாற்கடலில் பள்ளி கொள்ளும் பெருமாளை தான் பார்த்துள்ளோம். ஆனால் எங்களைப்போலவே மல்லாக்காகப் படுத்துறங்கும் விஷ்ணுவை தரிசித்துள்ளீர்களா..?

நேபாள தலைநகர் காத்மண்டுவிலிருந்து 14 கிலோமீற்றர் தொலைவில் சிவபுரி மலையடிவாரம் உள்ளது. இங்குள்ள புத்கானிகந்தா கோவிலில் பெருமாளான நாராயணன் தான் ஆதிசேஷன் மீது அழகாகப் படுத்துள்ளார்.

நேபாளத்தின் மிகப்பெரிய மிதக்கும் பெருமாள் இவர் தான்.  கிட்டத்தட்ட 13 நூற்றாண்டுகளுக்கும் மேல் நீரிலேயே மிதக்கும் இந்த சிலை விஞ்ஞானிகளையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

குறைந்த அடர்த்தியுடைய எரிமலைக் குழம்பிலிருந்து இந்தச் சிலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், சிலிக்கா தன்மை நிறைந்த கற்களாலும் இதனை உருவாக்கியிருக்கலாம் எனவும் பலவேறான அனுமானங்கள் இந்த மிதக்கும் பெருமாளைச் சுற்றியுள்ளது.