பிரித்தானிய மகாராணியிடம் விருது பெற்றவர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு

பிரித்தானிய மகாராணியிடம் இருந்து விருது பெற்ற இலங்கை இளைஞர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்ததுடன் அவர்களுக்கு நினைவுப் பரிசில்களையும் வழங்கி வைத்துள்ளார்.

ரகித மாலேவன மற்றும் செனெல் வன்னியாராச்சி ஆகிய இரு இளைஞர்களும் இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பிரித்தானிய மகாராணியிடம் இருந்து விருது வென்றுள்ளனர்.

je

குறித்த இரு இளைஞர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று சந்தித்துள்ளனர்.

இதன்போது இலங்கைக்கு பெற்றுத்தந்துள்ள பெருமையை பாராட்டிய ஜனாதிபதி, தனது ஆசிகளையும் தெரிவித்தார்.

இலங்கை அரசியலில் பெண்கள் பிரதிநித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடுசெய்தல், இளைஞர்கள் மற்றும் பெண்களை விழிப்பூட்டல், பால் சமத்துவம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பில் அறிவூட்டுவதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்தல் போன்ற விடயங்களுக்காக செனெல் வன்னியாராச்சிக்கு பிரித்தானிய மகாராணியால் விருது வழங்கப்பட்டது.

je1

 

இதேவேளை எச்.ஐ.வீ வைரசுக்கான ஒரு மருந்தை கண்டுபிடித்தமைக்காக ரகித மாலேவனவுக்கு பிரித்தானிய மகாராணியால் விருது வழங்கப்பட்டது.

இந்த இரு இளைஞர்களையும் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியதுடன், பாராட்டுக்களையும், தனது ஆசியையும், நினைவு பரிசில்களையும் வழங்கி வைத்துள்ளார்.