சிறைச்சாலை பஸ்வண்டி மீது தண்ணீர் போத்தலால் தாக்குதல்

புத்­தளம், வென்­னப்­புவ பகு­தியால் சென்று ­கொண்­டி­ருந்த  சிறைச்­சாலை பஸ் ஒன்றின் மீது தாக்­குதல்  நடத்­தப்­பட்­டுள்ள சம்­பவம் தொடர்பில் பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

Capture

 

அனு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்­டி­ருந்த சிறைச்­சாலை பஸ் ஒன்றின் மீது நேற்று அதி­காலை வேளையில் வைக்­கால பகு­தியில் வைத்து தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. நேற்று அதி­காலை மூன்று மணி­யளவில் இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இந்த பஸ் வண்டி தாக்­கு­த­லுக்கு இலக்­கா­ன­போது அதனுள் வெலிக்­கடை சிறைச்­சா­லை­யி­லி­ருந்து நாடக குழு­வொன்றை சேர்ந்த கைதிகள் 14 பேர் இருந்­துள்­ளனர். இவர்­களை அனு­ரா­த­பு­ரத்­தி­லுள்ள விஹாரை ஒன்­றுக்கு மல்­லிகைப்பூ வழி­பாட்டு நிகழ்­வொன்­றிற்­காக அழைத்துச் சென்­று­விட்டு மீண்டும் வந்த போதே இந்த தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது.

இந்த சம்­பவம் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விரி­வான விசா­ர­ணை­களின் போது மோட்டார் சைக்­கி­ளொன்றில் வந்த இனந்­தெ­ரி­யாத இருவர் இரண்­டரை லீற்றர்கள் தண்ணீர் நிரப்­பப்­பட்ட  போத்­த­லொன்­றினால் பஸ்­வண்­டியின் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

எவ்­வா­றா­யினும் நேற்­று­வ­ரையில் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் எவரும் கைது செய்­யப்­பட்­டி­ருக்­க­வில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட வேளையில் பஸ் வண்டியினுள் இருந்த கைதிகளுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.