இந்தியா-இலங்கை இடையேயான கிரிக்கெட் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
காலே,
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்க்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. முதல் இன்னிங்சில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணி 600 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் 190 ரன்களும் புஜாரா 153 ரன்களும் அதிகபட்சமாக குவித்தனர்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சில் பேட் செய்த இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தாரைவார்த்தது. 291 ரன்களில் இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து பாலோ ஆன் ஆனது. 309 ரன்களுடன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய இந்திய கிரிக்கெட் அணி தேநீர் இடைவேளை வரை 16.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் சேர்த்து இருந்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.