காரைநகர் கடற்படை முகாமுக்கு அருகில் கரையொதுங்கிய சடலம் யாருடையது!?

bod

யாழ்ப்பாணம் காரைநகர் எலார கடற்படை முகாமிற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் குறிப்பிட்ட சடலம் இன்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இன்னமும் அடையாளங்காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும் குறிப்பிட்ட சடலம் மீனவரினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.