முதலாவது தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

kappalஇலங்கை கடற்படைக்காக இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தினால் நிர்மானிக்கப்பட்ட முதலாவது தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இன்று காலை வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.
நவீன போர்கப்பலான இக்கப்பல் இலங்கை கடற்படை வரலாற்றில் புதிதாக வாங்கப்பட்ட முதல் கப்பலாக குறிப்பிடத்தக்கது. இக்கப்பலை தயாரிப்பதற்கு சுமார் 66.55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

குறித்த கப்பல் இலங்கை கடற்படையிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த ஜூலை 22ம் திகதி நடைபெற்றது. மேலும் இலங்கை கடற்படைக்காக நிர்மாணிக்கப்படுகின்ற இரண்டாவது கப்பல் 2018 ஆண்டில் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளது.

 

இந்த நிகழ்வில் கடற்படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பியல் த சில்வா, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல கொடி அதிகாரி கடற்படை கட்டளை ரியர் அட்மிரல் கபில சமரவீர , மின் மற்றும் மின்னணு பொறியியல் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் உபுல் ஏக்கனாயக்க ஆகிய சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட கடற்படை தலைமையகத்தின் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.