55 ஆண்டுக்கால சாதனையை தகர்த்த தவான்

thavaan

இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், அதிரடி காட்டியதன் மூலம் 55 ஆண்டுகால சாதனையை இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகார் தவான் முறியடித்துள்ளார்.

காலி மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தவான் உணவு இடைவேளைக்கு பிறகு தேனீர் இடைவேளைக்குள் 126 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் இந்த காலப்பகுதிக்குள் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை பதிவுசெய்தார்.

55 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1962ஆம் ஆண்டு போர்ட் ஒப் ஸ்பெயினில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்டில் இந்தியாவின் பாலி உம்ரிகர், 110 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த சாதனையை தவான் தற்போது முறியடித்துள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் தவானுக்கு முன்பாக இங்கிலாந்தின் டெனிஸ் காம்ப்டன் 173 ஓட்டங்கiளும், வோல்டர் ஹேமன்ட் 150 ஓட்டங்களையும், அஸ்ரேலியாவின் ஸ்டான் மெக்காப் 127 ஓட்டங்களையும் பெற்று சாதனைப் பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

முதல் இன்னிங்ஸிற்hக துடுப்பெடுத்தாடிய ஷிகார் தவான், 168 பந்துகளில் 31 பவுண்ரிகள் அடங்களாக 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.