இலங்கையுடன் முதல் டெஸ்ட்: இந்திய அணி 600 ரன்களுக்கு ஆல்-அவுட்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் டெஸ்ட் டெஸ்ட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது.
cri
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்திருந்தது. சிகார் தவான் 190 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா 144 ரன்களிலும், ரஹானே 39 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்த புஜாரா 153 ரன்களிலும், ரஹானே 57 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் இறங்கிய அஸ்வின் 47 ரன்களும், ஹர்திக் பாண்டியா 50 ரன்களும் குவித்தனர். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவான் பிரதீப் 6 விக்கெட்களையும் லஹிரூ குமாரா 3 விக்கெட்களையும் ஹெராத் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் திமூத் குமாரா 2 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.டபுல்யூ. ஆனார். தற்போது உபுல் தராங்காவும் தனுஸ்கா குணதிலகாவும் களத்தில் உள்ளனர்.