இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றது இங்கிலாந்து.

IN

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி போட்டியில், இந்தியாவின் அதிரடி பந்துவீச்சால் இங்கிலாந்து திணறி வருகிறது.

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டம், இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

அதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

போட்டி ஆரம்பித்தில் இருந்தே இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றது.

தற்போது வரை இங்கிலாந்து அணி 25 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்களை எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியில் லாரென் வின்ஃபில்ட் 24 ரன்களும், டாமி பியூமோண்ட் 23 ரன்களும், கேப்டன் ஹீ்த்தர் நைக்ட் 1 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர்.

சாரா டைலர் 26 ரன்களும் மற்றும் நட்டாலி ஸிவர் 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர்.

இந்திய அணி சார்பில் பூணம் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ராஜேஷ்வரி கெய்க்வாட் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.